தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நல திட்டங்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கல் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 August 2024

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நல திட்டங்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கல்

வேலூர் ஆக.20

வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று இருத்தல் வேண்டும். இந்த அடையாள அட்டை எளிதாக கிடைத்திட ஏதுவாக வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அடுக்கம்பாறையிலும் மற்றும் வியாழக்கிழமைகளில் அரசு மருத்துவமனை குடியாத்தத்திலும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைப்பெற்று வருகிறது. தற்போது, குடியாதத்தில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகள் நடைப்பெற்று வருவதால் 22.08.2024 அன்று முதல் அடையாள அட்டை வழங்கும் முகாம் குடியாத்தம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெறும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா.சுப்புலெட்சுமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad