தேசிய அறிவியல் மனப்பான்மை தின விழா மற்றும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆயிஷா நடராஜனின் நூல் வெளியீட்டு விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 August 2024

தேசிய அறிவியல் மனப்பான்மை தின விழா மற்றும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆயிஷா நடராஜனின் நூல் வெளியீட்டு விழா

வேலூர் ஆக 20

வேலூர் மாவட்டம் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட கிளையுடன் டி.கே.எம்.மகளிர் கல்லூரி கிளையும் இணைந்து சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா.நடராஜன் அவர்கள் எழுதிய அறிவியலின் குழந்தைகள் புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் தேசிய அறிவியல் மனப்பான்மை தின விழாவும் வேலூர் டி.கே.எம் மகளிர் கல்லூரி 20.08.2024 பிற்பகல் 2.30 மணியளவில்  நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர்  ஆர்.பானுமதி தலைமை தாங்கினார்.
 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியை பே.அமுதா மாவட்ட பொருளாளர் வி குமரன் மாவட்ட துணைத் தலைவர் கே விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கித்தனர்.  முன்னதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தன்ன் வரவேற்று பேசினார்.
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா.நடராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் அப்பொழுது அவர் இதுவரையிலும் 160 க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பதாகவும் அந்த நூல்களில் பகுத்தறிவு காணவும் அறிவியல் இயக்க செயல்பாடுகளுக்காகவும் எழுதி இருப்பதாகவும் கூறினார். 
  அறிவியலின் குழந்தைகள் புத்தகத்தினை அறிமுகம் செய்து வைத்து மாநில புத்தக வெளியீட்டு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்பிரமணி பேசினார்.
டி.கே.எம் மகளிர் கல்லூரியின் முதல்வர்  ஆர்.பானுமதி நூலை வெளியிட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.முகமது பாதுஷா, மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலப்பொருளாளர் கு.செந்தமிழ்செல்வன், கல்லூரியின் விலங்கியல் துறைத்தலைவர் டி.சசிகலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
வேலூர் கிளை நிர்வாகி தலைவர் கே தேவி செயலாளர் முத்து.சிலுப்பன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.காயத்ரி,  மாவட்ட இணை செயலாளர் எ.பாஸ்கர், கவிஞர் எழுத்தாளர் முல்லைவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
விழாக்குழு செயலாளர் வி.ரேகா, ஜி.வித்யா, விழாக்குழு உறுப்பினர்கள் வி.கிருத்திகா, எ.விநோதினி, எஸ்.விஜயகுமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்கின்றனர்.
பகுத்தறிவாளர் மற்றும் மருத்துவர் என பன்முகம் கொண்ட  நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்ட ஆகஸ்ட் 20ஆம் நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 


No comments:

Post a Comment

Post Top Ad