நெல்லூர் பேட்டை சன்னதி வீதியில் எழுந்தளியிருக்கும் ஸ்ரீ மாசுபட அம்மன் ஆலையத்தில் 60 ம் ஆண்டு 6 ம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் மற்றும் பால்குட ஊர்வலம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 August 2024

நெல்லூர் பேட்டை சன்னதி வீதியில் எழுந்தளியிருக்கும் ஸ்ரீ மாசுபட அம்மன் ஆலையத்தில் 60 ம் ஆண்டு 6 ம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் மற்றும் பால்குட ஊர்வலம்!

குடியாத்தம் ஆக 23 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஸ்ரீ மாசுபட அம்மன் ஆலயத்தில்  6-வெள்ளி ஊஞ்சல் உற்சவம் மற்றும் பால்குட ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.

காலை 6:00 மணிக்கு ஸ்ரீ மாசுபடா அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு காமாட்சியம்மன் பேட்டை  திரெளபதி அம்மன் கோவில் இருந்து பால்குடம் பூந்தேர் எடுத்து மாசுபடு அம்மன் கோவில் வந்து அடையும் அபிஷேக ஆராதனையும் நடைபெறும்
ஸ்ரீ மாசுபடா அம்மனுக்கு 10O8 பெண்கள் பால்குடம்  ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வழியாக வந்து கோவிலில் வந்து அடையும்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கேவி கோபாலகிருஷ்ணன் நகர மன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதான வழங்குகிறார்

இந்நிகழ்ச்சிக்கு கௌரவ தலைவர் எம் பி ராமநாதன் கமிட்டி தலைவர் ஆர் தயாளன் கமிட்டி செயலாளர் ஏ ஆர் மாதவன் துணைத் தலைவர் எஸ் குமார் கமிட்டி பொருளாளர் எம் கருணாகரன் ஆலோசகர் தேவலிங்கம்
துணை செயலாளர் எஸ் நாகலிங்கம் ஏ தண்டபாணி கே எம் மோகன் எஸ் ஈஸ்வரன் வெங்கடேசன் ஆர் மணிவண்ணன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்

இந்நிகழ்ச்சியில் மேளம் தாளத்துடன் கரகாட்டம் ஒயிலாட்டம் நெகிழ்ச்சியுடன் பால்குடம் ஊர்வலமாக வந்தது இதில் பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad