அத்திக்கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

அத்திக்கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

குடியாத்தம் ஆக 15

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பில் 78 வது  சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது . இதில் சிறப்பு விருந்தினராக M .D அம்பலால்  நிறுவனத்தின் குழுவின் தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட கவர்னர்  குடியாத்தம்   Rtn AKS.K .ஜவாரிலால் ஜெயின் அவர்கள் கலந்துக் கொண்டு கொடி  ஏற்றி வைத்து  வாழ்வில் சிறக்க தெய்வத்தால் ஆகா தெனினும்  முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என திருக்குறளுக்கு  இணங்க  கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி இருக்க வேண்டும் மற்றும் நாடு முன்னேற நாமும் பங்கு பெறவேண்டும் என சிறப்புரை ஆற்றினார் . மேலும் அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் ஆ கென்னடி அவர்கள் முன்னிலை வகித்தார். குடியாத்தம் பாலிடெக்னிக் கலலூரி முதல்வர் k . குமரவேல் , அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கலலூரி முதல்வர் டாக்டர் k .தங்கராஜ் , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ்  சீனித்துரை  ஆகியோர் கலந்துகொண்டனர் . 

அத்தி கல்லூரியின் மாணவர்கள் யோகா சனம் செய்து காட்டியும் , சுதந்திரதின சிறப்பு பேச்சு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். அத்தி நிர்வாகி அதிகாரி செந்தில்குமார் , மருத்துவர்கள் , செவிலியர்கள்  , பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad