கோட்ட அளவில்லான விவசாயிகள் மாதாந்திர குறை தீர்வு நாள் கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

கோட்ட அளவில்லான விவசாயிகள் மாதாந்திர குறை தீர்வு நாள் கூட்டம்.

குடியாத்தம் ஆக 14

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர தீர்வு நாள் கூட்டம் நேற்று மாலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை அலுவலர் உமா சங்கர் முன்னிலை வகித்தார் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நெடுமாறன் வரவேற்றார்

இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சுமத்திரா தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபி வனத்துறை அலுவலர்கள் முரளி அண்ணாமலை சுரேஷ் கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராம பாஸ்கர் உள்பட 13 துறை அலுவலர்கள் பங்கேற்றனர்

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் இருந்து முதல் மதுகு வழியாக செல்லும்  பாசன கால்வாய்களை தூர் வரவேண்டும் 

கிராமப்புறங்களில் இ சேவை மையம் கட்டிடங்கள் தாயார் நிலையில் உள்ளது இருப்பினும் அதில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்

குடியாத்தம் பெரும்பாடி அக்ரஹாவரம்  சேம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் குடியாத்தத்தில் இருந்து கொட்டாரமடுகு வழியாக மோர் தானா செல்ல சாலை வசதிகள் செய்தி தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
விவசாயிகள் விவாதித்தனர்

இந்நிகழ்ச்சியில் விவசாயப் பிரதிநிதிகள் சேகர் பழனியப்பன் சுப்பிரமணி குணசேகரன் தலித் பாஸ்கர் மற்றும் குடியாத்தம் பேரணாம்பட்டு கே வி குப்பம் ஆகிய பகுதியிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad