நெல்லூர் பேட்டை ஊராட்சியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

நெல்லூர் பேட்டை ஊராட்சியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்

குடியாத்தம் ஆக15

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஊராட்சி முல்லை நகர் பிள்ளையார் கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு நெல்லூர் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி ஜடையப்பன் தலைமை தாங்கினார்கள்
இதில் கலைஞர் கனவில் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பணிகள் விவரம்
15  வது மானிய நிதி குழு திட்ட பணிகள் குறித்து
 தூய்மையான குடிநீர் வழங்குதல் குறித்து இணைய வழியில் வீட்டு வரி குடிநீர் வரி சர கட்டணங்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே செலுத்துதல் என்று ஆலோசிக்கப்பட்டது

சிறப்பு விருந்தினராக உதவி பொறியாளர் புவியரசன் வேளாண்மை அலுவலர் ராஜேந்திரன் தலைமை ஆசிரியை அன்புக்கரசி இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கே ஜீவா எஸ் மீனா கே நாகராஜ் திலகவதி ரம்யா சரளா எஸ் பழனி
மற்றும் பொதுமக்கள் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
இறுதியில் ஊராட்சி செயலாளர் நிர்மல் குமார் நன்றி கூறினார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad