காட்பாடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 78வது சுதந்திர தின விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 78வது சுதந்திர தின விழா

காட்பாடி ஆக15-


வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜனார்த்தனன், கலைச்செல்வனுக்கு விருது வழங்கி பாராட்டு. 
மிக சிறப்பாக இவ் விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார்.  பள்ளி உதவித்தலைமையாசிரியர்கள் எம்.மாரி முத்து, கே.திருமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
வேலூர் மாநகராட்சியின் 1வது மணட்லக்குழு தலைவர்  புஷ்பலதா வன்னியராஜ் தேசிய கொடியினை ஏற்றிவைத்து ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ.கலைச்செல்வன் ஆகியேருக்கு சேவைக்கான விருதுகளை வழங்கியும் பள்ளியில் 100 சதவிகிதம் தேர்சி விழுக்காடு காட்டிய ஆசிரியர்களக்கு சான்றிதழ்களை வழங்கியும் பேசினார்.  
ஜுனியர் ரெட்கிராஸ், பாரத சாரணியர், சாலை பாதுகாப்புபடை, மாணவர் காவல் படை, தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.  
வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் எல்.சித்ரா லோகநாதன், எம்.சித்ரா மகேந்திரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே. தாமஸ் எ சதீஸ்குமார், உறுப்பினர்கள் மகந்திரன் லோகநாதன், பாலாஜி, நந்தகுமார், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ.கலைச்செல்வன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். இடைநிலை ஆசிரியை கே.ஜெகதீஸ்வரி தொகுப்புரையாற்றினார்.  மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது.  
பள்ளியில் சிறப்பான மதிப்பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூபாய் 10ஆயிரம் ரொக்க பரிசினை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் லோகநாதன் வழங்கினார். 1300 மாணவிகளுக்கு லட்டு இனிப்பு வழங்கப்பட்டன.  
முடிவில் உடற்கல்வி ஆசிரியை ஜி.கௌசல்யா நன்றி கூறினார்.

படவிளக்கம்…. காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதினை வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் வழங்கினார்.உடன் தலைமையாசிரியை கோ.சரளா, மாமன்ற உறுப்பினர் எம்.சித்ரா மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.தாமஸ் சதீஸ்குமார் உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad