காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 8வது பயனாளி முன்னாள் இரணுவ வீரருக்கு இலவச ஆக்ஸிஜன் செரிவூட்டி வழங்கல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 August 2024

காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 8வது பயனாளி முன்னாள் இரணுவ வீரருக்கு இலவச ஆக்ஸிஜன் செரிவூட்டி வழங்கல்!

காட்பாடி ஆக21

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 8வது பயனாளி
முன்னாள் இரணுவவீரருக்கு இலவச ஆக்ஸிஜன் செரிவூட்டி வழங்கல்
நோய் பரவல் காரணமாக நோய் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெற உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் செரிவூட்டி இயந்திரங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரெட்கிராஸ் சார்பில் வழங்கும் வங்கியின் சார்பில் 8வது பயனாளிக்கு இலவச ஆக்ஸிஜன் செரிவூட்டியை சின்ன அணைக்கட்டு முன்னாள் இராணுவ வீரர் சேகரன் பீக்கி அவர்களின் மருத்துவ சேவைக்காக 21.08.2024ல் வழங்கப்பட்டது. 

அணைக்கட்டு பகுதியை சேர்ந்த நோயாளி முன்னாள் இராணுவ வீர்ர் சேகரன் பீக்கி  அவர்களிடம் 10லிட்டர் ஆக்ஸிஜன் செர்வூட்டியினை  இலவசமாக அவைத் தலைவர்   செ.நா.ஜனார்த்தனன்  வழங்கினார்.
துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன் ஆர்.விஜயகுமாரி செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் டி.கோதண்டராமன் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. வேலூர் சி.எம்சி. மருத்துமனையில் சுவாசிப்பதற்கு சிறம்ப்படும் நிலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நிமிடத்திற்க 0.5 முதல் 1 லிட்டர் வரை என்ற விகித்த்தில் ஒரு நாளைக்கு குறைந்த்து 16 மணிநேரம் மற்றும் மூச்சுத் தினறல் ஏற்படும் போது மூக்கின் வழியாக ஆக்சிஜனை உள்ளிழுக்க செய்ய வேண்டும் என்ற பரிந்துரையின் பேரில் வீட்டிற்கு அனுப்பட்டார்.  அதன் பேரில் இன்று ரெட்கிராஸ் சங்கங்த்தின் சார்பில் இந்த ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது.

இலவச ஆக்சிஜன் செரிவூட்டி கருவி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது..   இந்த வங்கி கடந்த ஆண்டு கரோனா நோய் தீவிரமான நிலையில் இருந்த போது அப்போதைய வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செ.விஷ்ணுபிரியா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.  இது வரை ஏழு பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.  
இவ்வங்கியில் இரண்டு செரிவூட்டி இயந்திரங்கள் உள்ளன. ஆக்சிஜன் கருவியினை பயனாளிகளே வந்து எடுத்துக்கொண்டு பயன்பாடு முடிந்த பின் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து விடவேண்டும்.  ஆக்சிஜன் கருவி அதிகப்பட்சமாமக 15 நாட்கள் வரை மட்டுமே உபயோகப்படுத்த அனுமதிக்கப்படும்.  
ஆக்சிஜன் கருவிக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டாலோ ரிப்பேர் ஏற்பட்டாலோ அந்த தொகை பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும்.  பயனாளிகள் திரும்ப பெற்றுக் கொள்ளும் வைப்பு தொகையாக ரூபாய் 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) செலுத்த வேண்டும்.  
ஒருவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.  மருத்துவரின் மருத்துவ சீட்டு மருத்துவ ஆவணங்கள், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இவை அனைத்தும் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.  முகவரி சான்று, ஆதார் அட்டை சமர்பிக்க வேண்டும்.  ஆக்சிஜன் கருவி இருப்பு உள்ளதை பொருத்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்து வழங்கப்படும்.    
இலவச ஆக்சிஜன் கருவி தேவைப்டுவோர் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், காட்பாடி வட்ட கிளை, எண்.1, முதல் குறுக்கு தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காந்திநகர், காட்பாடி வேலூர் – 632007 என்ற முகவரியில் வந்து பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad