வேலூர், ஆக.1
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி ஊராட்சி ஒன்றியம், செம்பராயநல்லூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட இந்திரா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், ஹேமலதா மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment