அரசு பள்ளியில் சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவிய (ஓவம்) கண்காட்சி திறந்து வைத்து கூட்டுறவு வங்கி தலைவர் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 17 August 2024

அரசு பள்ளியில் சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவிய (ஓவம்) கண்காட்சி திறந்து வைத்து கூட்டுறவு வங்கி தலைவர்

காட்பாடி ஆக17-

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் (முன்னாள் மாணவர்கள்), சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவியக் (ஓவம்) கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஓவியம் மற்றும் சிற்ப கலை கண்காட்சி கடந்த 15-ம் தேதி துவங்கிய இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினராக முன்னாள் வேலூர் மைய கூட்டுறவு வங்கி தலைவர், அஇஅதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், காட்பாடி சட்டமன்ற தொகுதி 2021 வெற்றி வேட்பாளருமான வி.ராமு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டு, ஓவிய மற்றும் சிற்ப கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஓவியங்கள், களிமண்ணால் ஆன சிலைகள், மரம் வடிவில் சிட்டு குருவி அமைத்த கூடுகள் பறவைகள் உறையிடங்கள் ஆகியவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை மிகுந்த கவர்ச்சிக்கு உள்ளாக்கியது. வேலூரில் உள்ள இளம் மனங்களை ஊக்குவிக்கவும், அறிவூட்டவும், ஹரிஷ்
மற்றும் அவரது நண்பர்கள் அவரது முன்னாள் பள்ளியில் தொடர்ச்சியான இலவச பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகின்றனர். இந்த பட்டறைகள் மாணவர்களை நுண்கலை உலகிற்கு அறிமுகப்படுத்தும், அதே பள்ளி தாழ்வாரத்தில் ஒருமுறை நடந்த ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் அவர்களின் படைப்பு திறனை ஆராய
அவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும்.

இந்நிகழ்ச்சியில் சேர்க்காடு பள்ளி தலைமை ஆசிரியர் சைமன், சென்னை பைன் ஆர்ட்ஸ் அரசு கல்லூரி பேராசிரியர் கவிமணி, விஷூவல் ஓவியர் விஜய் பிச்சுமணி, சரவணன் சந்துரு, பயிற்சியாளர்கள் பாலாஜி, கோவிந்தசாமி, கலை ஆனந்த், நாகராஜன், கல்லூரி பயிற்சி ஓவியர்கள் அஸ்வின், அபிஷேக், பாஸ்கர், ஹரிஷ், இர்பன்ராஜ், மணிகண்டன், மீரா, உள்ளிட்ட கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி வரும் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் சுயநலவாதிகள் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர்கள் வெங்கடேசன், தனிகைமணி,  மோகன், ட்ரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் விண்ணம்பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர் அதிமுக மோகன் ஏற்பாட்டில் இந்த அமைப்பு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் அஇஅதிமுக ஜெய வடிவேல், வழக்கறிஞர் அன்பு பாபு, லட்சுமி, நரசிம்மன், ராஜசேகர் விழா இறுதியில் அதிமுக மோகன் நன்றியுரையாற்றி விழா நிறைவுபெற்றது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad