தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 August 2024

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியாத்தம் ஆக 17-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பாக கொல்கத்தாவில் அரசு மருத்துவர் பாலியல் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் அரசு மருத்துவர் சங்கம் செயலாளர் மஞ்சுநாதன் தலைமை தாங்கினார்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் படுகொலையை கண்டித்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் பாலியல் படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இறந்த பெண் மருத்துவருக்கு மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள்

இதில் மருத்துவர்கள் பியூலா மாலதி சுமதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad