விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கோலாகலம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 18 August 2024

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கோலாகலம்.

காட்பாடி ஆக17 


வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து, விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் 62ஆம் பிறந்தநாள் விழா முன்னிட்டு ஆகஸ்டு 17ல் வெகு விமர்சையாக பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி, இனிப்புகள், அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர். 

இந்நிகழ்ச்சி வி.சி.க மாவட்ட துணைச் செயலாளர் அப்பு (எ) வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மா.அ.செ, நீல.சந்திரகுமார், மாநகர மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், இ.சி.பா.மா.செ எல்.விஜயகுமார், மா.து.செ, வி.ச.ரகு, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் காட்பாடி பகுதி1 கே.பி.ராஜ்குமார், ஜெ.ஆமோஸ், ஆண்டனி டியோதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் விசிக நிர்வாகிகள் குட்டி, எஸ்.சக்திவேல், பாலசாமி, ஷாகுல், ஏ.ஸ்டீபன், வி.சத்தீஷ்குமார், ஆர்.சிவா, டி.மெர்வின் ஆகியோர்களுடன் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad