விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 August 2024

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

குடியாத்தம் ஆக 17

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு  பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார் குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் விடுதலை செழியன் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சி தமிழரசன் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் சி ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பிறந்தநாள் விழாவை துவக்கி வைத்து சிறப்புரை நாடாளுமன்ற செயலாளர் சிவ செல்ல பாண்டியன் மாவட்ட செயலாளர் மேற்கு மா சுதாகரன் மறைமலை என்கிற வேதாச்சலம் சிறப்புரையாற்றினார்கள்

பிறகு கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்கள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad