குடியாத்தம் போலி பெண் மருத்துவர் கைது - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 22 August 2024

குடியாத்தம் போலி பெண் மருத்துவர் கைது

குடியாத்தம் ஆக 22

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவர் 2 தினங்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக பிச்சனூர் அரசு மரத்தெரு பகுதியில் தனியார் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் பிரியா என்பவரிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்
இதனால் அவர் உடல்நிலை அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார்கள் அங்கு பிரியங்கா என்பவர் இறந்து உள்ளார்

இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலானது
இதை அடுத்து நேற்று துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் மருத்துவத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோர் தலைமையில் மேற்கண்ட கிளினிக்கை ஆய்வு செய்தனர் மேலும் மருத்துவர் தலை மறைவு ஆகிவிட்டார் இன்று காலை நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad