தெற்கு இரயில்வே துறை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 August 2024

தெற்கு இரயில்வே துறை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

வேலூர் ஆக 23


வேலூர் மாவட்டம் தெற்கு இரயில்வே துறையின் இருப்புப்பாதை கடக்கும் சாலை (லெவல் கிராஸிங்) தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் D.M.கதிர் ஆனந்த்MP கலந்துக்கொண்டு புதியதாக இருப்புப் பாதை மேம்பாலங்கள் அமைக்க வேண்டிய இடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணன், மாவட்ட வருவாய் ஆய்வாளர், மாநகராட்சி ஆணையாளர்,  தெற்கு இரயில்வே துறை அதிகாரிகள்   மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை :

1.வேலூர் வசந்தபுரம்(LC-127), காட்பாடி கசம்(LC-58), வி.ஐ.டி கேட்(LC-53)  இலத்தேரி(LC-57), வடுகந்தாங்கள்(LC-59), வளத்தூர்(LC-70), வாணியம்பாடி நியூ டவுன்(LC-81)  இடையே உள்ள ரயில்வே லெவல் கிராஸிங் பகுதிகளில் எங்கெங்கு ரயில்வே மேம்பாலங்கள், சுரங்க பாலம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

2.காட்பாடியில் இரண்டாவது ரயில்வே மேம்பாலம் அமைத்திட டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

3.மேலும், வசந்தபுரம் பகுதியில் லெவல் கிராஸிங்கை மூடிவிட்டு மேம்பாலம் கட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் இடையூறுகளை கவனத்தில் கொண்டு லெவல் கிராஸிங்கை மூடாமல் மேம்பாலம் கட்டவும், அங்கேயே லிஃப்ட் வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் கட்டவும், இருசக்கர வாகனங்கள் சென்றுவர தனியாக இணைப்புச் சாலை அமைத்திடவும் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4.வேலூர் வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே நிலங்களில் வசிப்பவர்களை வெளியேற்றிட அவகாசம் பெற்றுத்தரவும் ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad