பொய்கை பேருந்து நிலைய தேசிய நெடுஞ்சாலையோரம் குளம் போன்று தேங்கும் கழிவுநீர், துர்நாற்றத்தால் பொதுமக்கள் பெரும் அவதி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

பொய்கை பேருந்து நிலைய தேசிய நெடுஞ்சாலையோரம் குளம் போன்று தேங்கும் கழிவுநீர், துர்நாற்றத்தால் பொதுமக்கள் பெரும் அவதி!

பொய்கை பேருந்து நிலைய தேசிய நெடுஞ்சாலையோரம் குளம் போன்று தேங்கும் கழிவுநீர், துர்நாற்றத்தால் பொதுமக்கள் பெரும் அவதி
 
அணைக்கட்டு ஆக27

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பொய்கை ஊராட்சி, பொய்கை பேருந்து நிறுத்தம், தேசிய நெடுஞ்சாலையோரம் பல ஆண்டுகளாக கழிவுநீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசும் அவல நிலை, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை இந்தக் கழிவுநீர் குளமானது சுமார் 4, 5 ஆண்டுகளாக இந்த கழிவுநீர் தேக்கமானது தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இங்கு முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பள்ளிகீ குழந்தைகள் என நாள் ஒன்றுக்கு சுமார் 10,000த்திற்கும் மேற்பட்டோர் இவ்வழியாக கடந்து செல்கின்றனர். இந்தக் காட்சியை இந்தப் படத்தில் காணலாம். இதனால் பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் தொற்றும் அபாயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ஊரக வளர்ச்சித் துறைக்கு புகார் கொடுத்தும் அந்த நிர்வாகம் எனக்கு தெரியாது என்றும், நெடுஞ்சாலைத் துறையில் புகார் கொடுத்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் இரு துறையினரும் போட்டாப் போட்டி போட்டுக் கொண்டு அலட்சியப்படுத்தி அலைச்சலுக்குள்ளாக்கி, பொதுமக்களை துர்நாற்றத்தில் அல்லல்படுத்தி வருகின்றனர். 

இந்த இடம் புகழ்பெற்ற பொய்சந்தை, மாட்டு சந்தைக்கு பெயர் போன இடமாகும் இங்கு வாரத்திற்கு ஒருமுறை செவ்வாய்கிழமை சந்தையும், மாதத்திற்கு சுமார் கோடி கணக்கில் வருவாய்கள் புரளும் இடமாகும், இங்கு வெளியூரிலிருந்து வரும் விவசாயிகளுக்கு கழிப்பிட வசதி கூட இதுவரை இங்கு உள்ள நிர்வாகம் செய்து தரவில்லை வசூல்கள் மட்டும் மிரட்டி மிரட்டி வசூல் செய்து வருகின்றனர், சிறுநீர் கழிக்க கூட வழியில்லை, இதனால் விவசாயிகள் கழிப்பிட வசதியின்றி, குடிநீர் வசதியின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் சாக்கடையை குளம் போன்று தேங்க விடாமல் கால்வாய் சந்திப்பில் இணைத்து கால்வாயை மூடி, பொதுமக்கள் இளைஞர்கள் முதியவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் பள்ளிக் குழந்தைகள் நடமாடும் இந்த இடத்தை பொது சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் மாடுகளுக்கும் வாகனங்களுக்கும் கோழிகளுக்கும் கடைகளுக்கும் பில் போட்டு வசூல் செய்யும் இந்த நிர்வாகம், ஆண்கள் கழிப்பிடம் பெண்கள் கழிப்பிடம் மற்றும் ஒதுக்குப்புறமாக அதிநவீன குடிநீர் வசதியுடன் கூடிய குடிநீர் மையம் அமைத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். இந்த மாவட்ட ஆட்சியாராவது நடவடிக்கை எடுப்பாரா சமூக ஆர்வலர் சார்பில் கோரிக்கை வைத்தனர். 


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad