குடியாத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

குடியாத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

குடியாத்தம் ஆக7

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அதிகமாக அணுகும்  அரசுத்துறைகளான மின்வாரிய துறை ஊரக வளர்ச்சி துறை வருவாய் துறை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் சார்ந்த குறிப்பிட்ட சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து 44 வகையான தனிநபர் சேவைகள் கோரி அளிக்கும் மனுக்கள் ஜீலை 11 முதல் செப்டம்பர் 15 வரை காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை மனுக்கள் பெறபட உள்ளது என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியதை தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராம ஊராட்சிகளுக்கு மனுக்கள் பெற 08 கட்டமாக தேதிகள் இடம் என ஒதுக்கீடு செய்து பட்டியல் வெளியானது பட்டியலை தொடர்ந்து நேற்று குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட
தட்டப்பாறை பாக்கம் மூங்கபட்டு சின்னாளப்பள்ளி முக்குன்றம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் நேற்று சீவூர் ஊராட்சி லட்சுமணபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் மேற்கண்ட ஊராட்சியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர் மனுக்கள் பெறப்பட்டது இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்தியாந்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனார் அப்போது உடன் இருந்த தாசில்தார் சித்ராதேவி  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத் நந்தகுமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி மீனா மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார் 
மற்றும் சின்னாளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் என்.பாபு மூங்கபட்டு ஊராட்சி மன்ற தலைவர் லதா சுகுமார் முக்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் கங்காராம் பக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன் தட்டப்பாறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad