தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 4 August 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்

வேலூர் ஆக-04

வேலூர் மாவட்டம் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாக்க்குழு கூட்டம் பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது.  
மாவட்ட தலைவர் முனைவர்  பே.அமுதா தலைமை தாங்கினார்.  முன்னதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வேலை அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  ஒன்றிய அறிக்கை சமர்பிக்கப்பட்டது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்து.சிலுப்பன், பா.ராஜேந்திரன், சா.குமரன், உள்ளிட்டோர் பேசினர்.
முன்னாள் மாநில பொருளாளர் கு.செந்தமிழ் செல்வன், மாநில செயல்பாடுகள் மற்றும் பயிற்சி விவரங்களை சமர்பித்து பேசினார்.
மாவட்ட துணைத்தலைவர் கே.விசுவநாதன் வரவேற்று பேசினார்.  துணைத்தலைவர் ஆர்.காயத்ரி, இணைச்செயலாளர்கள் பி.ரவீந்திரன், அ.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
கல்வி, ஆரோக்கியம், சமம், அறிவியல் பிரச்சாரம், அறிவியல் வெளியீடுகள், சுற்றுசூழல், வளர்ச்சி ஆகிய துணைக்குழுகள் ஏற்படுத்தப்பட்டன. மாவட்ட செயல்பாட்டு அறிக்கையினை செ.நா.ஜனார்த்தனன் வெளியிட மாவட்ட தலைவர் பே.அமுதா, முத்து.சிலுப்பன், கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. பள்ளிக் கல்வியில் தமிழக அரசு கொண்டு வந்த செய்து கற்பித்தல் முறை வானவில் மன்ற அமைப்பினை வடிவமைத்த தமிழக அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
2. பாட புத்தகங்களில் மதம்  சார்ந்து  பதியக்கூடிய மற்றும் பாதிக்கக்கூடியவிஷயங்களை பாட புத்தகத்தில் இடம்பெற கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
3. சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் நலன் தொடர்ந்து பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
4. வேலூர் மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் கடந்த நிலையிலும் புறவழிச்சாலைகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டுகின்றோம்.  
5. மேலும் வேலூர் மாநகர எல்லைக்குள் நகர பேருந்து வழித்தடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் காட்பாடி வரையும், கொணவட்டம் வழியாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வரையும், ஶ்ரீபுரம் தங்க கோயில் வரை, அடுக்கம்பாரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை என புதிய வழித்தடங்களில் நகர பேருந்துகளை இயக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தினையும் தமிழ்நாடு அரசையும் கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
6. சிறப்பாக செயலாற்றிய வேலூர் கிளைக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
 
நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் வீரா.குமரன் நன்றி தெரிவித்தார்.

வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad