ஆபத்தை விளைவிக்கும் தனியார் பேருந்துகளால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் சார்பில் கோரிக்கை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 August 2024

ஆபத்தை விளைவிக்கும் தனியார் பேருந்துகளால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் சார்பில் கோரிக்கை.

காட்பாடி ஆக-03

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் இயங்கி வரும் தனியார் பேருந்துகள் குறிப்பாக ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி பேருந்து வள்ளிமலை ரோட்டில் இருந்து தொடங்கி பாகாயம் வரை செல்லும் மீண்டும் பாகயத்தில் இருந்து மீண்டும் வள்ளிமலை ரோடு வரை செல்லும் பேருந்துகள் தற்பொழுது தாராப்படவேடு மாநகராட்சி அலுவலகம் எதிரில் அனைத்து பயணிகளை கீழே இறக்கி விட்டுவிடுகிறார்கள் இரண்டு கிலோமீட்டர் அவர்கள் எப்படி செல்வார்கள் வேறு ஏதேனும் ஆட்டோ மூலமாக செல்ல வேண்டும் அப்போது எதுக்கு பஸ் என்று பொதுமக்கள் புலம்பி தள்ளுகின்றனர். தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறுகிய பாதையில் பஸ்கள் திரும்புவதால் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் அவசர ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் தனியார் பேருந்துகள் மாநகராட்சி அலுவலகம் எதிரிலும் மற்றும் ரயில்வே வழித்தடத்திலும் திரும்புவதால் மிகவும் சிரமத்தை சந்திக்கின்றனர் பொதுமக்கள்.

 தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தனியார் பேருந்துகளை வள்ளி மலை பேருந்து வழி தடத்தில் வரை செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும் அவ்வாறே மீண்டும் அவர்கள் செய்தால் உடனடியாக அவருடைய பேருந்தின் உரிமை ரத்து செய்ய வேண்டும் ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு தொடர்ந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பிலும் சமூக ஆர்வலர்களின் சார்பிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை இந்த செய்தியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.


காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:

Post a Comment

Post Top Ad