தொலைந்து போன செல் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 29 August 2024

தொலைந்து போன செல் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தொலைந்து போன செல் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

வேலூர் ஆக29

வேலூர் மாவட்டம் களவு போன மற்றும் தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

CELL TRACKER மற்றும் CEIR-PORTAL மூலமாக வேலூர் மாவட்டத்தில் களவுபோன/தொலைந்துபோன செல்போன்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை சுமார் 2,08,67,000/- (இரண்டு கோடியே எட்டு இலட்சத்து அறுபத்து ஏழாயிரம்) ரூபாய் மதிப்புடைய 1,092 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மதிவாணன் அவர்களின் உத்தரவின்படி இன்று 29.08.2024-ம் தேதி ஏழாம் கட்டமாக CELL TRACKER மூலம் 160 புகார்கள் பெறப்பட்டு அதில் சுமார் 22,00,000/- ரூபாய் மதிப்புடைய 110 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், CEIR PORTAL மூலம் 180 புகார்கள் பெறப்பட்டு அதில் சுமார் 24,25,400/- ரூபாய் மதிப்புடைய 122 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மொத்தமாக 46,25,400/- (நாற்பத்தாறு இலட்சத்து இருபத்து ஐந்தாயிரத்து நானூறு) ரூபாய் மதிப்புடைய 232 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை மொத்தமாக சுமார் 2,54,92,400/- (இரண்டு கோடியே ஐம்பத்து நான்கு இலட்சத்து தொன்னூற்றி இரண்டாயிரத்து நானூறு) ரூபாய் மதிப்புடைய 1,324 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad