ரஜினிக்கும் துரைமுருகனுக்கும் ஏற்பட்ட லடாயை சரியாகிவிட்டது என கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் வைரமுத்து பேச்சு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

ரஜினிக்கும் துரைமுருகனுக்கும் ஏற்பட்ட லடாயை சரியாகிவிட்டது என கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் வைரமுத்து பேச்சு

ரஜினிக்கும் துரைமுருகனுக்கும் ஏற்பட்ட லடாயை சரியாகிவிட்டது என கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் வைரமுத்து பேச்சு

காட்பாடி ஆக27


வேலூர் மாவட்டம் காட்பாடி பல்கலைக்கழகம் மற்றும் தமிழயக்கம் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு அவர் கூறியது நடிகர் ரஜினிகாந்திற்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் ஏற்பட்டது தங்கத்தில் ஏற்பட்ட விரிசல் பெரியவர்களின்   நட்பு தண்ணீரில் கிழித்த அம்பு போல் தடம் காணாமல் போவதை போல் வம்பு கிழித்த தடம் காணாமல் போய்விடும்  அது சரியாகிவிட்டது கவிஞர் வைரமுத்து பேச்சு - நகைச்சுவையை பகைச்சுவையாக்காதீர்கள் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேட்டி 
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் நடைபெற்ற தனியார் விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி,நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்களும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில் ரஜினிகாந்த்¢ ஒரு நகைச்சுவை சொன்னார். துரைமுருகன்  ஒரு நகைச்சுவையை சொன்னார்.லிந்த நகைச்சுவை ரொம்ப சோகமாக பேசப்பட்டு  இரண்டும் சேர்ந்து இது தான் நகைச்சுவை என்ற உச்சத்திற்கு வந்துவிட்டது.    
துரை என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா  இது என்னப்பா நாங்கள் நகைச்சுவையாக பேசினோம் நீங்கள் ஏன் பகைச்சுவையாக பார்க்கிறீர்கள் என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டார்.
தமிழில் ஒரு பழம் பாடல்  ஒன்று உண்டு அது தான் ரஜினி அவர்களுக்கும் துரைமுருகன் அவர்களுக்கும் இன்று நிகழ்ந்துள்ளது.
உங்கள் பகை கல்லில் விழுந்த பிளவா தங்கத்தில் விழுந்த பிளவா? கல்லில் விழுந்த பிளவை ஒட்ட வைக்க முடியாது, தங்க தட்டில் கீறல் விழுந்தால் நெருப்பை காட்டினால் ஒட்டிவிடும்.
இரண்டு தங்கங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என வாழ்த்து தெரிவியுங்கள். பெரியவர்களின் நட்பானது தண்ணீரில் அம்பு கிழித்த மாதிரி.  அம்பு கிழித்த தடம் நீர் ஓட்டத்தில் கலந்து காணாமல் போகும்.
அதேபோல் போல் வம்பு கிழித்த தடமும் நேற்றோடு போய்விட்டது  என பேசினார்.
இவ்விழாவிலிருந்து திடீரென செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையை பகைச்சுவையாய் பயன்படுத்த வேண்டாம் நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்  என கூறினார்.


காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad