அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

காட்பாடி ஆக 24


                  வேலூர் மாவட்டத்தில் 134 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக  காட்பாடி வட்டம் பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 24.07.2024 இன்று மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.சதீஸ்குமார் தலைமை தாங்கினார். பிரம்மபுரம் ஊராட்சி மன்றத்தில் தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். முன்னதாக பள்ளி உதவித்தலைமையாசிரியர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார் வரவேற்றுப் பேசினார்.
மறு கட்டமைப்பின் பார்வையாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்றார் இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக வி.கோமதி, துணைத்தலைவராக ஆர்.சாமுவேல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களாக உஷாமயில், சலுஜாமனோகரன் ஆசிரியர் பிரதிநிதியாக எஸ்.பிரச்ன்ன தேவகுமாரி உள்பட 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
     தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மறுக்கட்டமைப்பு நிகழ்வு ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டது பெற்றோர்கள் தங்கள் வருகையை பதிவு செய்தனர் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர் உறுப்பினர்கள் 24 பேரும் இணைந்து தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுத்தனர்.  வேளாண் ஆசிரியர் அக்ரி.இ.ராமன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.  துணைத்தலைவர் பதவிக்கு போட்டி இருந்த்து வருகை தந்த பெற்றோர்கள் கையை உயர்த்தி ஆதரவினை தெரிவித்தன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
முடிவல் பள்ளியின் ஆசிரியர் பிரதிநிதி எஸ்.பிரசன்ன தேவகுமாரி நன்றி கூறினார்.இந்த மறு கட்டமைப்பு கூட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள 134 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்றது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad