மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

வேலூர் ஆக 24

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 23.08.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் (Monthly Crime Review Meeting) நடைபெற்றது. 

இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், குட்கா, கஞ்சா மற்றும் மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்க குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 எனவும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிளை குண்டர் தடுப்பு சட்டதின் கீழ் அடைக்கப்பட வேண்டும், நகைக்கடை, அடகுகடை, வங்கி, ஏ.டி.எம் மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் இரவு ரோந்து மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், மதுவிலக்கு, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க 06 மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் CCTV கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும், சாலைகளில் முறைக்கேடாக மற்றும் சாலை விதிகள் மீறி வாகனங்களை இயக்குபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சைபர் க்ரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், SC/ST வழக்குகள் குறித்தும், காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்களுக்கு விரைந்து CSR/FIR பதிவு செய்யப்பட வேண்டும், மனுதாரர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் வரும் காலங்களில் குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடைபெறாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad