தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும் என அறிவிப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 August 2024

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும் என அறிவிப்பு!

பேரணாம்பட்டு ஆக 21 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆலோசனைக் கூட்டம் விரைவில் மாவட்ட தலைவர் , செயலாளர் நியமனம் தலைமை நிலையம் அறிவிப்பு பேரணாம்பட்டு  வேலூர் மாவட்டம் , குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் , டாக்டர் ஜான்பாண்டியன்  உத்தரவின் படி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

 இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் காஞ்சி கண்ணன் தலைமை தாங்கினார் , மசிக்கம் கிராமத்தை சேர்ந்த குணசீலன் வரவேற்றார் , மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் , சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முக சுதாகர் பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கான படிவங்களை பெற்று உறுப்பினர் படிவங்களை வழங்கினார் . மேலும் கட்சியின் கொள்கை சட்ட திட்டங்கள் குறித்து புதிய உறுப்பினர்களிடம் பேசினார் , இதில் புதிய நீதி கட்சி  , சமத்துவ மக்கள் படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் பதவி வகித்து வந்தவர்கள் அதிலிருந்து விலகி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் . பின்னர் பேரணாம்பட்டு வி கோட்ட ரோடு பகுதியில் உள்ள சென்ட் ஸ் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் கேப்டன் எஸ் பிரசாத் குமாரை வழக்கறிஞர் சுதாகர் மற்றும் தலைமை நிலைய பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்  நிகழ்ச்சி இறுதியில் வேலூர் டாக்டர் ஜெனிஃபர் நன்றி தெரிவித்தார் . இதில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடியேற்றம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த லாவண்யா தினேஷ் செய்திருந்தார் . இதில் மாவட்ட தலைவர்  , மாவட்ட செயலாளர்  ,இணை செயலாளர்  , துணைச் செயலாளர் , நகர ஒன்றிய  ,தலைவர் செயலாளர்களுக்கான பதவி கேட்டு 50க்கும் மேற்பட்டோர் விருப்பு மனுவை தலைமை நிலைய நிர்வாகிகளிடம் வழங்கினார்கள் . இவை விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியாகப்படும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமை நிலையம் அறிவித்துள்ளது .

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad