மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நிகழ்ச்சியில் துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நிகழ்ச்சியில் துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு.

குடியாத்தம் ஆக 8

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அகரம்சேரியில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் எம்எல்ஏ வில்வநாதன் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை வழங்கினர். அருகில் சப் கலெக்டர் சுபலட்சுமி ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் மற்றும் பொதுமக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்  நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம்சேரி கொல்லமங்கலம் பள்ளிகுப்பம் கூத்தம்பாக்கம் சின்னசேரி ஆகிய‌‌ 5 ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் அகரம்சேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .
ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம் பிரிதீஷ் தலைமை வகித்தார் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் குடியாத்தம் தாசில்தார் சித்ரா தேவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் வினோத்குமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக சப் கலெக்டர் சுபலட்சுமி ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர் பெறப்பட்ட சில மனுக்களுக்கு அங்கேயே உடனடியாக தீர்வு காணப்பட்டது முகாமில் வருவாய்  துறை காவல்துறையினர் மின்சாரம் சமூக நலன் சுகாதாரம் உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் ஆன்லைனில் பதிவு செய்தனர் இதில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகரம்சேரி ஊராட்சி மன்ற தலைவர் வச்சலா சின்னசேரி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி கொல்லமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கோபி கூத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார் பள்ளிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர் முகாமில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆனந்தி நித்யானந்தம் சரோஜா பர்குணம் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad