காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்நத் நாள் விழா கர்பிணி தாய்மார்களக்கு பேரிச்சை பழம் வழங்கல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 13 August 2024

காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்நத் நாள் விழா கர்பிணி தாய்மார்களக்கு பேரிச்சை பழம் வழங்கல்!

காட்பாடி ஆக12

            வேலூர் மாவட்டம் காட்பாடி         இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை சார்பில் சங்ர்வதேச அளவில் 196 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனிவா ஒப்பந்த தினம் 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் கற்பினிகளுக்கு பேரிச்சை பழம் வழங்கப்பட்டது. 

இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன்  தலைமை தாங்கினார் 
செயலாளர் கல்வி உலகம் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்று  பேசினார்.  
அவைதுணைத்தலைவர் இரா.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, சேவகன் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், பொருளாளர் வி.பழனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் டி.மனோகரன், அரசு நகர்புற சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் லட்சுமி ஆகியோர் கற்பினி தாய்மார்களுக்கு பேரிட்சை பழ பாக்கெட்டுகளை வழங்கினர்.
இது குறித்து அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன்  பேசியதாவது..  முதல் ஜெனீவா உடன்படிக்கை (First Geneva Convention) என்பது 1864 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் நாள் அன்று சுவிட்சர்லாந்து  நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான  ஜெனீவா நகரில் வைத்து உலகநாடுகளிடையே போர் நடைபெரும்போது போர் வீரர்களை எப்படி நடத்தப்படவேண்டும் என்ற உலகலாவிய சட்டம் இயற்றப்பட்டதைக் குறிக்கும். பொதுவாக இது ஜெனீவா உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது.  1863 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் முன்முயற்சியின் காரணமாக இந்த உடன்படிக்கை முடிவுசெய்யப்பட்டது.  இந்த ஒப்பந்த்த்தின் மூலம் போரில் காயமடையும் அனைத்து நாட்டு வீர்ர்களுக்கும் மனிதாபிமான முறையில் முதலுதவி செய்வது முதன்மையான நோக்கமாகும்.
ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள் 1949ஆம் வருடம் ஜெனிவாவில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதனை சர்வதேச அளவில் 196 நாடுகள் ஏற்றுக்கொண்டன.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 75வது ஆண்டு இந்த நாளை நினைவு கூறுகிறோம். என்றார். இந்த நிகழ்வில் பங்கேற்ற 65 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பேரிச்சம்பழம் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 


No comments:

Post a Comment

Post Top Ad