வேலூர் CMC யின் ராணிப்பேட்டை வளாகத்தில் சிறப்பு குழந்தைகள் நல உயர் சிகிச்சை மையத்தின் அடிக்கல்நாட்டு விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 12 August 2024

வேலூர் CMC யின் ராணிப்பேட்டை வளாகத்தில் சிறப்பு குழந்தைகள் நல உயர் சிகிச்சை மையத்தின் அடிக்கல்நாட்டு விழா

ராணிப்பேட்டை, ஆக12 

சிஎம்சி வேலூர் ராணிப்பேட்டை வளாகம், தமது  2-ம் கட்ட சிறப்பு மருத்துவப் பராமதிப்பு விரிவுபடுத்தப்படுகிறது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். குழந்தை மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையத்திற்கான அடிக்கல் நாட்டு  விழாவானது, சிஎம்சி வேலூரின் 125 ஆண்டுகால விரிவான சுகாதாரப் பணி மற்றும் நோயாளி பராமரிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். கனடாவை சேர்ந்த  ஃபேர்ஃபாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் பெங்களூருவை மையமாக கொண்டு விளங்கும்  க்வெஸ் கார்ப் லிமிடெட் நிதியுதவியுடன், இந்த புதிய முயற்சியானது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை கொண்டிருக்கும். இதற்கு முன் பொது மக்கள் அணுக முடியாத மேம்பட்ட தொழில்நுட்ப ஆதரவை இந்த மையம் வழங்கும்.
சிஎம்சி வேலூரில் குழந்தை மருத்துவ சிகிச்சைகள்  1928 ஆம் ஆண்டில்  தொடங்கியது, எமது நிறுவனர் டாக்டர் ஐடா சோபியா ஸ்கடர், ஆதரவற்ற குழந்தைகளுக்கான புகலிடமாக, 'எலன் ஸ்கிரிப்ஸ் குழந்தைகள் மருத்துவமனை' 'ஜி' வார்டினை  நிறுவினார். 1940 ஆம் ஆண்டில், சிஎம்சி வேலூர் குழந்தைகளுக்கான புறநோயாளிகள் கிளினிக் அறிமுகப்படுத்தப்பட்டது , இது குழந்தைகளுக்கான அர்ப்பணிக்கப்பட்ட சேவைகளின் தொடக்கமாக விளங்கியது . 1958 ஆம் ஆண்டில் புதிய கட்டிடங்களுடன் குழந்தை சுகாதாரத் துறை விரிவுபடுத்தப்பட்டது . பின்னர் 1970 ஆம் ஆண்டில் க்யூ பிளாக்கில் இரண்டு குழந்தைகள் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதை தொடர்ந்து டிசம்பர் 2000 இல் CMC யின் நூற்றாண்டினை முன்னிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஐடா எஸ் ஸ்கடர் நூற்றாண்டு மையம் திறக்கப்பட்டது. இத்துறையின் பாதையில் 1930 இல் வேலூரின் முதல் குழந்தை மருத்துவர் டாக்டர் அன்னா டீஜென்ரிங் உட்பட பலர் உண்டு. டாக்டர் எம்.டி.கிரஹாம், டாக்டர். எல். லிப்ஸ்கோம்ப், டாக்டர். ஜே.கே.ஜி வெப், டாக்டர் ஷீலா பெரேரா, டாக்டர் மாலதி ஜாதவ், டாக்டர் பி. ரகுபதி, டாக்டர் செல்லம் கிருபாகரன், டாக்டர் பிரபாகர் மோசஸ், டாக்டர் எம்.சி. மேத்யூ, மற்றும் டாக்டர் ஏ.கே. ஜனா உள்ளிட்ட புகழ்பெற்ற குழந்தை மருத்துவர்களின் பங்களிப்புகளால் இந்த துறை மற்றும் அதன் சேவைகள் வளர்க்கப்பட்டது..
இத்துறை வெளிநோயாளிகளாக 1.4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு சேவை செய்கிறது மற்றும் ஆண்டுதோறும் 6,300 க்கும் மேற்பட்டவர்களை உள்நோயாகிலாக அனுமதிக்கிறது. வெல் பேபி கிளினிக் என்கிற தடுப்பூசி மையம் ஒவ்வொரு ஆண்டும் 75,000  குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மற்றும் வளர்ச்சி கண்காணிப்பை வழங்குகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிரிவு ஆண்டுதோறும் 12,000 புதிதாகப் பிறந்த குழந்தைகளை சேர்க்கிறது. இது மூன்று பொது குழந்தை மருத்துவ பிரிவுகளாக செயல்படுகிறது, ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (1996 இல் நிறுவப்பட்டது)  குழந்தைகளுக்கான அவசரச் சேவைகள் (2005 முதல்), குழந்தைகளுக்கான உட்சுரப்பியல் (1983 முதல் ) 2001 இல் இந்தியாவின் முதல் புதிதாகப் பிறந்த தைராய்டு ஸ்கிரீனிங்கைத் தொடங்கியது, குழந்தை ஹெமட்டாலஜி-புற்றுநோய் (1984 முதல் ), குழந்தை சிறுநீரகவியல் (2003 ல் ), குழந்தைகள் ரூமட்டாலஜி (2005 ல் ), குழந்தைகளுக்கான வாதவியல் (2005 ல் ), குழந்தை தொற்று நோய்கள்பிரிவு (2009), இளம்பருவ மருத்துவம் (2013 முதல் ) மற்றும் குழந்தை இரைப்பை குடல் மற்றும் ஹெபடாலஜி (2014 முதல் ). குழந்தை மருத்துவ துணை சிறப்புகளில் குழந்தை அறுவை சிகிச்சை (1978 முதல்) , குழந்தை நரம்பியல் (2007 முதல் ), குழந்தை சரும நோய் (1997 முதல் ), குழந்தை காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு (2005), குழந்தை எலும்பியல் (2007 முதல் ) மற்றும் பல துறைகள் செயல்பட்டுவருகின்றன.
ராணிப்பேட்டை வளாகத்தில் அமைக்கப்படும் புதிய மையம் இறுதியில் இந்த சிறப்பு சிகிச்சை பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும். இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கான முன்னணி பராமரிப்பு வழங்கும் மையமாக குழந்தைகள் சுகாதாரத் துறையின் சேவையை மேலும் மேம்படுத்துகிறது. இது குழந்தை மருத்துவத்துக்கான முதன்மையான பயிற்சி மையமாகவும் செயல்படும், மருத்துவக் கல்வி மற்றும் நோயாளிகளின் பராமரிப்பின் மிக உயர்ந்த தரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் மையமாக இது விளங்கும்.
இந்த மையம் இயங்க ஆரம்பிக்கும் போது -  குழந்தைகளின் பராமரிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த குழந்தை மருத்துவக் குவாட்டர்னரி வசதி என்ற எங்கள் கனவு நிறைவேறும்  - 

நிகழ்ச்சியின் முடிவில்டாக்டர். விக்ரம் மேத்யூஸ், இயக்குனர், நன்றி உரை கூறினார். 

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad