நீர் நிலைகளை குப்பை கூடங்களாக மாற்றி வரும் மண்டலம் 1 மாநகராட்சியை கண்டித்து. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 September 2024

நீர் நிலைகளை குப்பை கூடங்களாக மாற்றி வரும் மண்டலம் 1 மாநகராட்சியை கண்டித்து.

காட்பாடி செப்.13-

வேலூர் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 1 அலுவலகத்திற்கு பின்புறம் காட்பாடி பழமை வாய்ந்த ஏரி உள்ளது. இதில் ஏரி சுற்றி உள்ள வீதிகளில் இருக்கும் குப்பைகளை ஏற்றிக் கொண்டு வந்து நீர் நிலைகள் உள்ள இடங்களில் அத்துமீறி குப்பைகளை கொட்டி வருகின்றனர் மாலை நேரத்தில் அவற்றை தீ வைத்து கொளுத்துகிறார்கள் இது தினந்தோறும் நடந்து கொண்டு வருகிறது. இதனால் நீர் நிலை மாசுபடு அடைவதோடு நிலத்தடி நீரும் காற்றும் மாசுபாடு அடைகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் புரட்சி கழகத்தின்   மாவட்ட செயலாளர் மக்கள் போராளி அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad