கே.வி.குப்பம் ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்பி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 13 September 2024

கே.வி.குப்பம் ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்பி!

கே.வி.குப்பம் ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்
டி.எம்.கதிர்ஆனந்த் இலவச
மிதிவண்டிகள் வழங்கல்!


வேலூர், செப்.13-

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியம், கே.வி.குப்பம் வட்டார அளவிலான அனைத்து  மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 
விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

கே.வி.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கே.வி.குப்பம் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள், கொசவன்புதூர்,  வேப்பூர்.ஆர்.எஸ்.பள்ளி, பில்லாந்திப்பட்டு, வடுகந்தாங்கல், 
இலத்தேரி, செஞ்சி, மாளிப்பட்டு 
ஆகிய பள்ளி மாணவர் மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதி வண்டிகள் மற்றும் கண் பார்வையில் குறையுள்ள மாணவ, மாணவிகளுக்கு மூக்குக்கண்ணாடிகள்
வழங்கிய அவர்,"பள்ளி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும், 
அத்துடன் ஒழுக்கத்தன்மை மிக்கவர்களாக அதாவது
பெற்றோர்களை, ஆசிரியர்களை மதிக்கும் நல்ல ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அப்படி ஒவ்வொரு மாணவர்களும்,ஒழுக்கமான மாணவர்களாக இருக்கும் பட்சத்தில்தான் எதிர்காலம் நல்ல சமுதாயமாக  உருவாக்கும்!" -என  மாணவர்களுக்கு சிறப்பு அறிரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில்,
கே.வி.குப்பம் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்துமதி வரவேற்புரையாற்றினார்.
மேலும், இதில் அரசு அதிகாரிகள் மற்றும் கே.வி.குப்பம் ஒன்றிய பெருந்தலைவர். எல்.ரவிச்சந்திரன், ஒ.து.பெ.த. பாரதிவெங்கடேசன்,
கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சீதாராமன்,
கி.ஒ.செ.ஆர்.முருகேசன்,திமுக பொ.கு.
உறுப்பினர்கள்.வி.டி.விஜியக்குமார்,
கே.தயாளமூர்த்தி, க.இ.ப.பேரவை மாநில,து.செ.,சி.கோபி,கே.வி.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்.
டி.புஷ்பலதாசரவணன்,
கே.வி.குப்பம் மத்திய
ஒன்றிய கவுன்சிலர்.
எம்.விஜயலட்சுமிமுருகன்,
ஒன்றிய கவுன்சிலர்.சரளா கலைவாணன்,இலக்கிய அணி அமைப்பாளர். சா.பரிமளம்,கட்டிட கமிட்டி  தலைவர்.வழக்கறிஞர்.
வி.ரவிச்சந்திரன்,பெற்றோர் ஆசிரியர் 
கழக தலைவர்.எல்.நந்தகோபால்,
திமுக மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான அனைத்து
பொறுப்பாளர்கள்,காங்குப்பம் ஊ.ம.த.,
செந்தில்குமார்,கே.வி.குப்பம் முன்னாள் ஊ.ம.த.,கே.பி.சரவணன்,
பசுமாத்தூர் மு.ஊ.ம.த.
ஏழ்மைநாதன்,முரளிராஜன், அன்பு மற்றும் திமுக பொறுப்பாளர்கள்.
கி.பா.கருணாநிதி,டி.உதயசூரியன்,
முடினாம்பட்டு.கே.குப்பன்,
மாச்சனூர்.மார்கபந்து மற்றும் மாவட்டம், ஒன்றியளவிலான
அனைத்து பொறுப்பாளர்கள் 
மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்.ரா.சாந்தி நன்றியுரையாற்றினார்.
மேலும், கே.வி.குப்பம் மகளிர்
மேல்நிலைப்பள்ளி அருகில்
உள்ள இடத்தில் மகளிர் 
கலை-அறிவியல் கல்லூரி, 
மேல்மாயில் சாலை
விரிவாக்கம் செய்து தருதல்,
அச்சாலையில்  சீரான மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்"- என மூன்று முக்கிய கோரிக்கைகளை வேலூர் நாடாளு மன்ற உறுப்பினரிடம்,
பள்ளி மேலாண்மை குழுவினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad