ஆர்யா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் எல்ஜி யுகேஜி குழந்தைகளின் தாத்தா பாட்டி மூத்த பெற்றோர்கள் தின விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 13 September 2024

ஆர்யா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் எல்ஜி யுகேஜி குழந்தைகளின் தாத்தா பாட்டி மூத்த பெற்றோர்கள் தின விழா

குடியாத்தம் செப் 13

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆரியா வித்யா ஷரம் சி பி எஸ் இ பள்ளியில் மூத்த பெற்றோர்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது

குடியாத்தம் ஆரியா வித்யாஷ்ரம் சிபி எஸ் இ மேல்நிலைப் பள்ளியில் 13 9 2024 வெள்ளிக்கிழமை இன்று காலை 10 மணி அளவில் மழலை வகுப்பு  (  pre. kg.LKG.UKG. ) மாணவர்களின் மூத்த பெற்றோர்கள் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
மழலைகளின் தாத்தா மற்றும் பாட்டிகள் குத்துவிளக்கினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்

இந்நிகழ்ச்சிக்கு ஆர்யா வித்யாஷரம் பள்ளியின் தலைவர் ஜி தண்டபாணி தலைமை தாங்கினார்
பள்ளியின் முதல்வர் நரேந்திரநாத் ரெட்டி சிறப்புரையாற்றினார்
பள்ளி ஆசிரியை . ப. ஆஷா வரவேற்புரை ஆற்றினார் மேலும் பள்ளியின் செயலாளர் சந்திரசேகரன் பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் பள்ளியின் அனைத்து அறங்காவலர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்களின் ஆடல் பாடல் கவிதை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது தங்கள் தாத்தா பாட்டிகளுக்கு பாதஅபிஷேகம். செய்து அவர்களின் ஆசிகளையும் மாணவர்கள் அனைவரும் பெற்றனர் அனைத்து மாணவர்களுக்கும் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர்

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொடுத்தார்கள்
மேலும் தாத்தா பாட்டிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

இறுதியாக ஆர்யா பள்ளி ஆசிரியை செல்வி ஏ. ஜே.நூா்லயன்த்ரன்ம்
நன்றி உரையாற்றினார் நாட்டுப் பன்னுடன் விழா இனிதே முடிவடைந்தது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad