கைதியை வீட்டு வேலைக்கு அமர்த்திய விவகாரம் 14 அதிகாரி மீது வழக்கு பதிவு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 9 September 2024

கைதியை வீட்டு வேலைக்கு அமர்த்திய விவகாரம் 14 அதிகாரி மீது வழக்கு பதிவு!

வேலூர் செப்.9-

வேலூர் மாவட்டம் சிறை டி.ஐ.ஜி. உள்பட 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை கைதியை வீட்டு வேலைக்கு அமர்த்திய விவகாரம் வேலூர் சிறை டி.ஐ.ஜி. உள்பட 14 அதி காரிகள் மீது வழக்குப்பதி வுசென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
கிருஷ்ணகிரியை சேர்ந்த கலாவதி என்ற பெண் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொலை குற்றத்திற்காக தனது மகன் சிவக்குமார் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த நிலை யில் போலீஸ் அதிகாரி வீட்டில் 4.5 லட்சம் மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி எனது மகனை கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

 இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண் டும்' என்று கூறப்பட்டி ருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலூர் தலைமை மாஜிஸ்திடும். விசாரணைக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் விசாரணை நடைபெற்று நீதிம ன்றத் தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறைக் கைதி சிவக்குமா ரை சட்டவிரோதமாக வீட்டு வேலைக்கு பயன் படுத்தியது உறுதிப்படுத் தப்பட்டது. எனவே தவறு செய்த வேலூர் சிறைத்துறை அதி
காரிகள் மீது விசாரணை‌ செய்து கடுமையான நட வடிக்கை எடுக்க வேண் பாதிக்கப்பட்ட கைதி சிவக்குமாருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். சிவக் குமாரை வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை வழங்கி யது. மேலும் இந்த விவ காரம் குறித்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்என்று உத்தரவிடப்பட்டது. அதனடிப்படை யில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர்சிறைத் துறை டி.ஐ.ஜி. ராஜலட் சுமி மற்றும் சிறை அதிகா ரிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள் ளனர். இந்த வழக்கு வரு கிற செப்டம்பர் 18ந்தேதி சென்னை உயர் நீதிமன் றத்தில் மீண்டும் விசார ணைக்கு வர உள்ள நிலை யில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்துள் ளனர் குறிப்பிடத்தக்கது.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad