நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-2024 கல்வியாண்டின் உயர்கல்வி ஆலோசனை!
வேலூர் செப்.24-
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, உள்ள ஊரிசு கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2023-24 கல்வியாண்டில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்வு எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) முனைவர் அ.மலர், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமசந்திரன், முதன்மை கல்வி அலுவலர் செ.மணிமொழி மற்றும் ஊரிசு கல்லூரி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment