ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலையில் பைப் லைன் புதைக்கும் பணி தாமதம் பொதுமக்கள் அவதி.
வேலூர் செப்.24-
வேலூர் மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலையில் பைப்லைன் புதைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால் வேலூர் டு ஊசூர் நெடுஞ்சாலை, (லட்சுமி தியேட்டர்) அரசு பஸ் டிப்போ மற்றும் கனரா வங்கி எதிரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலையில் பைப்லைன் புதைக்கும் பணிகளால் பெரும் போக்குவரத்து பாதிப்பு, பள்ளி நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு. ஒப்பந்த விதிமுறைப்படி பணிகளை மேற்கொள்ளாததால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு, சம்பந்தப்பட்ட துறை கண்டுகொள்ளாத நிலை இதனால் சாலையில் மாசு அதிகரித்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி மாநகராட்சி பணிகளில் வேதனை தெரிவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு அதிகரிப்பை தடுக்க, மண் தூசு பறக்காமல் அடிக்கடி சாலையில் தண்ணீர் தெளித்து பொது சுகாதாரம் உறுதி செய்ய தவறு தவறுபவர்கள் மீது, மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, ஒப்பந்ததாரர் மீதும் அதற்கு உடந்தையாக செயல்படும் அரசு ஊழியர்கள் மீதும் உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment