புதிய நியாய விலை கடை திறப்பு மற்றும் 45 பெண்களுக்கு ஆடு வழங்கும் விழா
கே வி குப்பம் செப்.22-
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் நாகல் ஊராட்சியில் இன்று காலை பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா மற்றும் 2 பெண் குழந்தைகள் பெற்ற 45 தாய்மார்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு நாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட்டு தலைமை தாங்கினார் ஒன்றிய குழு உறுப்பினர் சீதாராமன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு பகுதி நேர நியாய விலை கடை திறந்து வைத்து ஆடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி
வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி
கே வி குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் குபேந்திரன்
No comments:
Post a Comment