குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் பொதுமக்கள் அவதி அதிமுக மாவட்ட செயலாளர் ஆய்வு
வேலூர் செப்.22-
வேலூர் மாவட்டம் 48வது வட்ட கழகத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மிகவும் துர்நாற்றத்துடன் கழிவுகள் உள்ளதை நேற்று அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர் மேலும் அப்பகுதியில் சுற்றுவட்டாரத்தில் மிகவும் அசுத்தமாக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் சிறிதலும் மேற்கொள்ளா மல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை அப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் SRK.அப்பு அவர்கள் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் மாநகராட்சி பணிகளை விரைந்து மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளார் உடன் பகுதிகழகச் செயலாளர் A.G.பாண்டியன் , கிரிராஜ் , சான்பஷா , சஜித் , வட்ட கழக செயலாளர் L.S.சரவணன் , சங்கர் அப்பகுதி மக்கள் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment