மயிலாடும் மலையில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலையத்தில் சிறப்பு பூஜை
குடியாத்தம் செப்.22-
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் மயிலாடும் மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயத்தில் இன்று காலை புரட்டாசி சிறப்பு பூஜை நடைபெற்றது
இக்கோவிலில் சிறப்பு அம்சமாக கருவறைக்குள்கருவறையில் 9/34 அடி உயரத்தில் முருகன் சிலை உலகத்திலேயே மயிலாடு மலையில் மட்டும் உள்ளது .இந்தக் கோயில் 1970 ஆம் ஆண்டு முருக பக்தர் கிருபானந்த வாரியார் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
பின்பு சித்தர் ஶ்ரீலஶ்ரீ மிளகாய் சித்தர் நாகராஜ சுவாமிகள் மற்றும் பாலமதி ஶ்ரீ இராமகிருஸ்ண சாது மற்றும் ஊர் பொதுமக்களால் முருகர் கடவுள் வேல் அமைத்து வழிபட்டு வந்தனர் தற்போது பிரபலமான உடன் வாரந்தோறும் செவ்வாய் வெள்ளி பௌர்ணமி கிருத்திகை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர் இதில் பக்தர்கள் அனைவருக்கும் கலந்துகொண்டு நேர்த்திக் கடனை செய்தார்கள்
குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்து 45 நாட்களுக்கு தேங்காய் கட்டி வழிபட்டு வந்தால் திருமணம் நடக்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்
கோவிலை அப்பகுதியை சேர்ந்த கண்ணப்பன் மகாதேவன் ஜெயராஜ்மூர்த்தி ராகவன் உள்ளிட்டவர்கள் பூஜைகள் செய்து ஆலயத்தை பராமரித்து வருகிறார்கள் இன்று கிருத்திகை தினத்தை முன்னிட்டு சுமார் 3000 பேருக்கு காலை உணவு மற்றும் மதியம் உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment