குடியாத்தம் அருகே கஞ்சா வைத்திருந்த
இருவர் கைது
குடியாத்தம் செப்.18-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன்
இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் மேலாளத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலாளத்தூர் ஒற்றைக்கண் பாலம் அருகே நின்றிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கூட நகரம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் மனோஜ் ராஜா(வயது 27) மேலாளத்துர் பகுதியைச் சேர்ந்த முஸ்தகின் என்பதும் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை எடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. மனோஜ் ராஜா முஸ்தகின் ஆகிய இரு வரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment