அருப்புமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 1 September 2024

அருப்புமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

அருப்புமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்       பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் 

காட்பாடி செப் 1


                  வேலூர் மாவட்டத்தில் 151 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக  காட்பாடி வட்டம் அருப்புமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 31.08.2024 இன்று மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

      நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ட்டி.வேணுகோபால் தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் கலந்து கொண்டு தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். 
மறு கட்டமைப்பின் பார்வையாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்றார் இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக வி.சியாமளா, துணைத்தலைவராக கே.நீலவேணி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதியாக மாநகராட்சியின் 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா.சரவணன் ஆசிரியர் பிரதிநிதியாக வி.கார்குழலி முன்னாள் மாணவரின் பெற்றோர் பிரதிநிதிகளாக எம்.வசந்தகுமார், அனிதா, திவ்யா, தண்டபாணி, உள்பட 24பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
      தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மறுக்கட்டமைப்பு நிகழ்வு ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டது பெற்றோர்கள் தங்கள் வருகையை பதிவு செய்தனர் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர் உறுப்பினர்கள் 24 பேரும் இணைந்து தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுத்தனர்.  
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் எஸ்.சிவசுப்பிரமணியம், எம்.ஷீலாதேவி, பி.இருதயசகாய ராணி, என்.பாமா, எஸ்.பூங்குழலி, எம்.சகாயராணி, கே.ராஜலட்சுமி, எம்.செண்பகவள்ளி, பி.ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மறு கட்டமைப்பு கூட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள 151 ஊராட்சி ஒன்றிய மற்றும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்றது


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad