மாணவர் செயலுக்காக ஆசிரியர் பணி இடைநீக்கம் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து பணிசெய்தல், தொடர் போராட்டம் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 September 2024

மாணவர் செயலுக்காக ஆசிரியர் பணி இடைநீக்கம் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து பணிசெய்தல், தொடர் போராட்டம் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு!

வேலூர் செப்.22-

வேலூர் மாவட்டம் மாணவர் செயலுக்காக ஆசிரியர் பணி இடைநீக்கம் கண்டித்து அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. 

 இக் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ்,  ஆ. ஜோசப் அன்னையா ஆகியோர் தலைமை தாங்கினார்.   முன்னதாக இணை ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். 
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜி.டி.பாபு, எஸ். ராஜேஷ்கண்ணா, எஸ்.எஸ்.சிவவடிவு, எம்.எஸ்.செல்வகுமார், கே.ஜெகதீசன், அக்ரி இ.ராமன், ஜி.சீனிவாசன், ஏ.வி.கவியரசன், கே.சங்கர், ஜி.கோபி உள்ளிட்டோர் பேசினார். 

பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 
காங்கேயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவிகள் செயலுக்காக ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தது குறித்துக் கண்டித்து  அனைத்து வகை ஆசிரியர்கள்  நாளை 23.09.2024 திங்கட்கிழமை முதல் வேலூர் மாவட்டத்தில் ஆரம்ப ப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும்  அனைத்து ஆசிரியர்களும் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மேலும் இதுகுறித்து நாளை திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையிடுவது எனவும் ஆசிரியரின் பணியிடை நீக்கத்தை இரத்து செய்யும் வரை பல்வேறு வகைகளில் போராட்டம் தொடரும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முடிவில் நிதிக்காப்பாளர் ஜி.கோபி நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad