மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி - சாவில் மர்மம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 September 2024

மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி - சாவில் மர்மம்!

வேலூர் செப்.23-

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47). இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று (செப். 20) வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்கராஜ், வீட்டின் பின்புறம் உள்ள மலை அடிவாரத்தில் முனீஸ்வரன் கோவில் அருகே ஒரு மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து, தங்கராஜின் குடும்பத்தினருக்கும் சத்துவாச்சாரி போலீசாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரவுடிகள் சிலர் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், மர்மமான முறையில் தங்கராஜ் உயிரிழந்தார் என்றும், உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கராஜ் உறவினர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனிப்படை போலீசார் பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படும் நபர்களை தேடி வருகிறார்கள் என்றும் போலீசார் கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர் குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad