இளைஞர்களிடையே அறிவியல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 September 2024

இளைஞர்களிடையே அறிவியல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு

இளைஞர்களிடையே அறிவியல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு எடுக்கப்பட்டது. 

வேலூர் செப் 2 
                    

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூர் மாவட்ட அலுவலகம், பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் கே.விசுவநாதன் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் செயற்பாட்டு அறிக்கை சமர்பித்து பேசினார்.  மாவட்ட இணை செயலாளர்கள் எ.பாஸ்கர், என்.கோட்டீஸ்வரி, பி.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கு.செந்தமிழ்செல்வன், பா.ராஜேந்திரன், சா.குமரன், பெ.இராமு, ஆர்.வேல்முருகன், எஸ்.இளவழகன், சுகுமார், ஆகியோர் பேசினர்.
பின்வரும் தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.
1. அறிவியல் மனப்பான்மையை வளர்தெடுக்கும் வகையில் (Youth for Science) என்ற உப குழுவின் மூலம் வேலூர் மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களிடையே மக்களிடையே அறிவியல் பிரச்சாரங்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
2. கல்வி உப குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆர்.காயத்திரி, உறுப்பினர்கள் எஸ்.இளவழகன், வீ.குமரன் வளர்ச்சி மற்றும் சுற்று சூழல் உப குழுவின் ஒருங்கிணைப்பாளராக முத்து.சிலுப்பன், உறுப்பினர் சா.குமரன், சமம் உபகுழு ஒருங்கிணைப்பாளராக எப்சி, உறுப்பினர் எம்.ஈஸ்வரி, ஆரோக்கியம் உபகுழுவின் ஒருங்கிணைப்பாளராக எ.பாஸ்கார், உறுப்பினர்களாக பெ.ராமு, ஆர்.ராதாகிருஷ்ணன், அறிவியல் பிரச்சார உப குழுவின் ஒருங்கிணைப்பாளராக கே.விசுவநாதன், உறுப்பினர்கள் பி.ரவீந்திரன் சுகுமார், அறிவியல் வெளியீட்டு உபகுழுவின் ஒருங்கிணைப்பளராக ப.சேகர் உறுப்பினர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் கொண்ட மாவட்ட துணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.  இக் குழுவானது 15.09.2024 அன்று மாவட்ட அலுவலகத்தில் கூடி உபகுழு செயல்பாடுகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

3. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து வகை அரசு தொடக்க, நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் தொண்டர்களை பார்வையாளர்களாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நியமித்து செயல்படுத்தியதற்காக மாவட்ட குழு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. அறிவியல் மற்றும் கனித பாடங்களை எளிமையாக செய்து பார்த்து கற்றல் முறையினை கொண்டு வரும் வகையில் வானவில் மன்றங்களை ஏற்படுத்தி அதில் அறிவியல் இயக்கம் இணைந்து செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. மாவட்ட அளவில் அல்லது ஒருங்கிணைந்த வேலூர் (வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர்) மாவட்ட அளவில் அறிவியல் இயக்க நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் பயிற்சி கருத்தரங்கம் நடத்துவது

5. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குடும்ப விழா விரைவில் நடத்துவது

6. Youth For Science இளைஞர்களுக்கான அறிவியல். உப குழு ஒருங்கிணைப்பாளர் வி.ராமமூர்த்தி அவர்களின் தகவலின்படி  இச்செயல்பாட்டிற்காக வேலூர் மாவட்ட இணை செயலாளர் பி.ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முடிவில் மாவட்ட பொருளாளர் வீர.குமரன் நன்றி கூறினார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad