கொல்கல்தா முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியன் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 September 2024

கொல்கல்தா முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியன் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

 வேலூர் செப் 2 


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கொல்கல்தா முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியன் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததை கண்டித்து
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உடனடியாக நீதி வழங்கிட  வலியுறுத்தியும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.டி.ஜோஷி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பா.வேலு விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார். ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் மாவட்டத் துணைத் தலைவர் எம்.எஸ்.தீனதயாளன் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வி.ரமேஷ் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் மா.சினேகலதா சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் வேந்தன் எம்ஆர்பி செவிலியர் சங்க மாநில செயலாளர் ஹேமச்சந்திரன் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜிஸ்குமார் தமிழக தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜி சீனிவாசன், உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் அ .சேகர் நிறைவுறையாற்றினார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் சு.சுமதி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 148 பெண் ஊழியர்கள் 103 ஆண் ஊழியர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதி கேட்டு கோஷமிட்டனர் இந்த ஆர்ப்பாட்டம் மாலை 5:45 மணி அளவில் துவங்கி 7.30 மணி வரை நடைபெற்றது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad