அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்திட விழிப்புணர்வு கருத்தரங்கம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 4 September 2024

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்திட விழிப்புணர்வு கருத்தரங்கம்

காட்பாடி செப்.4-

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்திட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாவட்ட காவல் துறையின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்திட விழிப்புணர்வு கருத்தரங்கம் 04.09.2024 காலை பள்ளியின் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.  நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார்.  முன்னதாக ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து, வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் எம்.சித்ராமகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் மகேந்திரன் ஆகியேர் முன்னிலை வகித்தார்.  
காவல்துறையின் உதவி ஆய்வாளர் எம்.கலைச்செல்வி தலைமையில் தலைமைக்காவலர் சந்துரு, தினேஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர்  விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்து பேசினார்.  அப்போது அவர்கள் கூறியதாவது…..  மாணவிகள் குறிப்பாக பதின்ம பருவ மாணவிகள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி.  மாவட்ட காவல் துறை மாணவிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறது.  தயக்க மின்றி மாணவிகள் காவல் துறையினருடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு நேரப்போகும் நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டும்.  குழந்தைகளுக்கு உதவி எண்.1098, பெண்கள் மற்றும் சிறுமிகளக்கு எதிரான வன்முறையைத் தடுக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்ணமில்லா தொலைபேசி எண் 14417  உள்ளது எனவே அனைவரும் அச்சமின்றி தகவல் தெரிவியுங்கள் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கின்றோம் என்றார். பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் 500 பேர் பங்கேற்று தங்களுடைய சந்தேகங்களை கேட்டறிந்தனர்.  ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad