குடியாத்தம் செப்.27-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் உலகம் மருந்த ஆளுநர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவத்துறை இணை இயக்குனர் பாலசந்தர் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் மாறன் பாபு முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மருந்தாளர் ரவி வரவேற்றார். இதில் மருத்துவமனையில் பணியாற்றும் மருந்தாளுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் காது கேளாத பதினைந்து பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ் ரத்த வங்கி மருத்துவர் பியூலா உள்பட மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment