காவல் நிலையங்களில் கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நேதாஜி ஸ்டேடியம், ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வைத்து பொது ஏலம் அறிவிப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 September 2024

காவல் நிலையங்களில் கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நேதாஜி ஸ்டேடியம், ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வைத்து பொது ஏலம் அறிவிப்பு!

வேலூர் செப்.30-

வேலூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் வெளியான தகவல்

வேலூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் (Scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் உத்தரவின்படி வரும்  09.10.2024-ம் தேதி புதன்கிழமை காலை 09.00 மணி முதல், வேலூர் மாவட்டம் நேதாஜி ஸ்டேடியம், ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100/-ஐ நுழைவு கட்டணமாக செலுத்திய பின்னரே வாகனங்களை ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுக்கப்பட்ட இரண்டு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகையுடன் கூடுதலாக 12% வரியும் (GST), நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏலத்தொகையுடன் கூடுதலாக 18% வரியும் (GST) சேர்த்து செலுத்தப்பட வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்திற்கு இரசீது வழங்கப்படும். அந்த இரசீதே வாகனத்திற்குண்டான உரிமை ஆவணம் ஆகும். மேலும் விபரங்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் மோட்டார் வாகனப்பிரிவு, ஆயுதப்படை, வேலூர் அவர்களை நேரடியாக சென்று அலுவலகத்திலோ அல்லது 9498148207 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என்பதை வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad