ரோட்டரி சங்கம் மற்றும்  K V S Heart care இணைந்து நடத்தும் உலக இருதய தினம் இலவச இருதய நோய் மருத்துவம் முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 September 2024

ரோட்டரி சங்கம் மற்றும்  K V S Heart care இணைந்து நடத்தும் உலக இருதய தினம் இலவச இருதய நோய் மருத்துவம் முகாம்!

குடியாத்தம் செப்.29-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் உள்ள கே வி எஸ் மருத்துவமனையில் இன்று காலை இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது

தலைமை ரோட்டரி சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்
பொது மருத்துவர் நீரிழிவு இருதய நோய் சிகிச்சை மருத்துவர் எஸ் சுகுமார் வரவேற்புரை ஆற்றினார்
இருதய நோய் முகாம் துவக்கி வைப்பவர்கள் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் கே எம் ஜி கல்வி நிறுவனங்கள் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஜே கே என் பழனி
வழக்கறிஞர் கே எம் பூபதி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்
இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ் சுகுமார்
நோயாளிகளை பரிசோதனை செய்தார்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் செ கு வெங்கடேசன் ஆர்கே மகாலிங்கம் மதியழகன் பாலகிருஷ்ணன் உள்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad