குடியாத்தம் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம்
குடியாத்தம் செப்.30-
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள்
சார்பாக ஊட்டச்சத்து மாத நிறைவு விழா விழிப்புணர்வு ஊர்வலம் திருமகள் ஆலை கல்லூரி மாணவர்கள் 150 பேர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 100 பேர்களை கொண்டு நடைபெற்றது.
ஊர்வலத்தை வருவாய் கோட்டாட்சியர் செல்வி S. சுபலட்சுமி துவங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் , குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மு.அ. ஷமீம் ரீஹானா, திருமகள் ஆலை கல்லூரி முதல்வர் வாசுகி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் புவி அரசு, மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் , கல்லபாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சந்தியா, யோகா ஆசிரியை தவச்செல்வி , தன்னார்வலர் சகாபுதீன், ICDS மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment