தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் மன உளைச்சல் உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க
குடியாத்தம் செப்.18-
வேலூர் மாவட்டம்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தனியாருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மருத்துவமனையில் அமர்ந்து நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அங்கு சண்டையிட்டுக் கொண்டு வருவது வாடிக்கையாக வருகிறது இதனால் நோயாளிகளும் மருத்துவர்களும் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் .
50 நாட்களுக்கு முன்னதாக தலைமை மருத்துவ அலுவலர் மாறன் பாபு அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றினை அளித்தார் அதில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் அமர்ந்து அனைவருக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர் என்று தெரிவித்திருந்தார் உடனடியாக காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார் அந்த மனுவினை பரிசீலனை செய்து மருத்துவமனைக்கு காவலர் ஒருவரை நியமித்தனர். இருந்தபோதிலும் அந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மருத்துவமனை அவசர பிரிவு பகுதியில் அமர்ந்துகொண்டு நிமித்த காவலரிடமே பேசிக்கொண்டு அங்கேயே இருக்கின்றனர் மதிப்புக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இதனை விசாரித்து தேவையில்லாமல் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து அனைவருக்கும் இடையூறு செய்வதை தடுக்கும் வகையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களாகிய நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment