வேலூர் செப்.18-
வேலூர் மாவட்டம் பேரிப்பேட்டை விஸ்வகர்ம சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் வளாகத்தில் விஸ்வபிரம்ம தின விழா மற்றும் விஸ்வ பிரம்ம மஹாயாகம் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் வி.விசுவநாதன் ஆச்சாரி அவைத் தலைவர் எம்.ரவி செயலாளர் ஜெ. சீனிவாசன் பொருளாளர் கே.ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாநகர தலைவர் எஸ்.சக்திவேல் செயலாளர் எஸ்.அச்சுதன் பொருளாளர் எஸ்.யுவராஜ் மாநில செயலாளர் எம்.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய அர்ச்சகர் ஜோதி முருகாச்சாரியார் தலைமையில் கே.கிருபாகரன், பி.ராவனேஸ்வரன், பி.பார்த்திபன், எம்.தியாகராஜன், ஆர்.சீனிவாசன் ஆகிய அர்ச்சகர்கள் அபிஷேகமும் ஆராதனையும் செய்தனர். அலங்கார திலகம் என்.ராமு ஆச்சாரி சுவாமிக்கு அலங்காரம் செய்து வைத்தார்.
*சீனந்தல் மடாலயம் விஸ்வகர்மா ஜெகத்குரு 65 ஆவது குரு மகா சன்னிதானம் சிவஸ்ரீ சிவராஜனார் குரு மகா சுவாமிகள் விஸ்வகர்மா ஜெயந்தி குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் விஸ்வபிரம்ம சுவாமி திருவீதி உலாவினை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நல சங்கத்தின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன், தலைமை நிலைய செயலாளர் சு.சோமாஸ்கந்தன் காளிகாம்பாள் ஆலய திருப்பணி அபிவிருத்தி டிரஸ்ட் ஜி.முனுசாமி, ஆர்.ஜீவரத்தினம், கிருஷ்ணகுமார், நகைவேலை ஜெ.வெங்கடேஷ்ஆச்சாரி, மகாதேவமலை கே.நாகராஜ் சுவாமிகள், வி.ஆர்.சரவணன், உள்ளிட்ட பலர் பங்கேற்று விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் அருள் ஆசி பெற்றனர்.
விழாவில் கொடை வள்ளல்கள், உபயதாரர்கள் ஆர்.ஜுவரத்தினம், கே.நாகராஜன், ஆர்.மூர்த்தி, எம்.ஞானசம்பந்தம், எம்.ரவி, வெள்ளி வெங்கடேசன், டி.எஸ்.பாபு ஆம்பூர் எம்.ஜனார்த்தனன், ஜெயக்குமார், கே.ஜி.சண்முகம், ஞான.நடராஜடன், எம்.பிச்சாண்டி, வி.விசுவநாதன், ஜெ.சீனிவாசன், கே.ஜெகன்நான், எஸ்.சக்திவேல், எஸ்.அச்சுதன், எஸ்.யுவராஜ் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து பாராட்டப்பட்டனர்.
இவ்விழாவினை தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை, ஶ்ரீகாளிகாம்பாள் ஆலய திருப்பணி அபிவிருத்தி டிரஸ்ட், ஆடிவெள்ளி பால்குட விழா கமிட்டியினர், மாநகர துணை நிர்வாகிகள், விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிர்வாகிகள், தேவஸ்தான அமாவாசை ஊஞ்சல் சேவை கமிட்டியினர் இணைந்து செய்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment