காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 September 2024

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு!

காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் ஆசிரியர் தின விழா ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு

காட்பாடி செப்.6-
 
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார் .இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் ஆசிரியர் சர்வபள்ளி வீ.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.  இதன ஒரு பகுதியாக இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை சார்பில் ஆசிரியர் தின விழா காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டரை அரசு நிதி உதவி பெறும் சிவாந்தம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார்.  முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்று பேசினார்.  அவைத்துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
விழாவில் கட்டுரை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு எழுதுகோல் பரிசு வழங்கினர்.  2023-24ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரிய ஆசிரியைகள் ஆசிரிய ஆசிரியைகள் து.தனலட்சுமி, எல்.எஸ்.சீனிவாசன், என்.சதீஷ்கிருஷ்ணன், ஆர்.வெங்கடேசன், ஹில்டா அப்பலோனியா எலிசபெத், எஸ்.பூம்பாவை, அகிலன், கே.பாக்கியலட்சுமி, என்.வினோதினி, கே.வனிதா ஆகிய 13 பேருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கதராடை அணிவித்து நூல்களை பரிசாக வழங்கி பாராட்டப்பட்டனர்.

ஆசிரியர் தின விழா குறித்து அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் பேசும் போது கூறியதாவது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.  வீ. ராதாகிருஷ்ணன்' என்றழைக்கப்படும் 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்' அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி,  எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, 1952ல், இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல், இந்திய அரசு அவருக்கு 'பாரத ரத்னா' விருதினை வழங்கி கௌரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் மிக உயரிய பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே 'ஆசிரியர் தினமாக' செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad